நீயும் நானும்
வட்ட நிலவாக நீ
மாறவேண்டும்..! -உன்னை
முட்டும் மேகமாக
நான் ஆகவேண்டும்..!
ஓடை நீராக நீ
மாறவேண்டும்..!-உன்னை
உரசும் கரையாக
நான் ஆகவேண்டும்..!
வெள்ளிப்பனியாக நீ
மாறவேண்டும்-உன்னை
பேனி சுமக்கும் புல்லாய்
நான் ஆகவேண்டும்..!
துள்ளும் மீனாக நீ
மாறவேண்டும்..!
நீ நீந்தும் நீராக
நான் ஆகவேண்டும்..!
தென்றல் காற்றாக நீ
மாறவேண்டும்-அதில்
கலக்கும் பூவின் வாசமாக
நான் ஆகவேண்டும்..!
புல்லாங்குல்லாக நீ
மாறவேண்டும்- அதில்
வரும் இசையாக நானாக வேண்டும் ..!
காதல் பாடும் கவிஞனாகவே
நான் மாறவேண்டும்..!
உனக்காக கவிதை பாடியே - என்
காலம் போகவேண்டும்..!