அவளை பற்றி ஒரு கவிதை
பொன்னென்றும் முத்தென்றும் சிலர் கூறுவார்
அவள் கயல்விழி ஒளிகண்டு அவர் மாறுவார்;
மென்மையிலே மலரென்றும் பட்டென்றும் அறிந்தேனே
அவள் செவ்விதழ் வருடி அதை மறந்தேனே;
யாழ் இனிது குழல் இனிது என்போர்
அவள் அமுத மொழி கேளாதவர்;
அன்னமும் மயிலும் நடையில் தோற்குமே
அவள் செவ்வாழை கால்கள் புவியில் மிதக்கும்போது;
ஐயமுற்றேனே அழகில் கலைமகளா? திருமகளா? என்று
தெளிந்தேனே இவளென்று அவளை கண்ட அன்று.