சிறுமை
சுட்டெரிக்கும் சுடரே!
இருளை விலக்கிய ஒளியே!
அவள் சினத்திற்கு முன் நீ சிறுமை ஆவாய்.
மனிதகுலத்தின் மனையே!
நிரை தாங்கும் புவியே!
அவள் பொறுமைக்கு முன் நீ சிறுமை ஆவாய்.
சீவ அமுதே!
உருமாரும் நீரே!
அவள் கண்ணீர் முன் நீ சிறுமை ஆவாய்.
புவித் திரையே!
மாவலி கொண்ட வாயுவே!
அவள் சுவாசத்திற்கு முன் நீ சிறுமை ஆவாய்
ஆதியும் அந்தமும் அற்ற ஆகாயமே!
எங்கும் எதிலும் நிறைந்திருக்கும் பரம்பொருளே!
அவள் காதலுக்கு முன் நீ சிறுமை ஆவாய்.