அவளை பற்றி ஒரு கவிதை 2
பூத்துக் குலுங்குவது மலர்கள் அல்ல;
என்னைக் கண்ட அவள் புருவங்கள்!
அசைவது காற்றில் ஆடும் மலர்க்கொடி அல்ல;
என்னை பித்தனாக்கிய அவளது கொடிஇடை!
கவர்ந்திழுப்பது மலர்களின் நறுமணம் அல்ல;
என்னை மயக்கிய அவளது காந்தக் கண்கள்!
கவரப்பட்டது சுற்றித்திருயும் பட்டாம்பூச்சி அல்ல;
அவளை எண்ணி ஏங்கும் என்மனம்!
வேகமெடுப்பது அதன் இறகுகள் அல்ல;
அவள் குடியிருக்கும் எனது இதயத்தின் துடிப்பு!