அன்னையின் காதல்
முதன் முதலாய்
என் காதலர் தினம்
முற்றிலும் சந்தோசங்களை மட்டுமே கண்டது
விடிந்தால் காதலர் தினம் என்ற பரபரப்பு இல்லை ...
அவளோடு பேச முடியவில்லை என்ற சோகம் இல்லை ....
12 மணிவரை முழித்திருந்து வாழ்த்துக்கள் சொல்ல தேவை இல்லை ...
கடன் வாங்கி உடை வாங்கி பரிசு பொருள் வாங்க தேவை இல்லை ....
பரபரக்கும் சாலையில் வண்டியில் வேகமாய் சென்று ,
அன்று பூத்த ரோஜா வாங்கி ஆசையாய் காத்திருக்க தேவை இல்லை.....
வீட்டில் அவள் பல பல பொய் சொல்லி வருவதற்குள் நண்பகலை தாண்டிவிட்டாலும்
காத்திருத்தல் மிகவும் பிடித்தது ....
இன்று முதல் சண்டை போடகூடாது சத்தியத்துடன்
தொடங்கும் காதலர்தினம்
சண்டையிலே முடியும் ....
அவளுக்கு பிடித்தவைகள் மட்டுமே
எனக்கும் பிடிதவைகளாய் மாறும்
ஒன்றாய் வண்டியில் ஊர் சுற்றி
அன்பாய் முத்தமிட்டு
கொண்டாடிய காதலர் தினம் இன்று இல்லை எனக்கு .......
காரணம்.......
என் வாழ்வில் மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாக்கியவள்
அவள் சூழ்நிலை சரி இல்லை என கூறி பிரிந்து சென்றால்
அவள் விட்டு போன வேதனைகள் மனதை அறிதலும்
ஆனந்தமாய் சொல்வேன் இன்றைய காதலர் தினம் எனக்கு
ஏமாற்றமே இல்லாதது
..
ஆம் இன்று ...
வழக்கமாய் இன்று
என்னை அலங்கரித்து
சாப்பிடாமல் கூட செல்லும்
என்னை பார்த்த , என் அன்னை ...
இன்று அவர்கள் கையால் உண்டு
சிறிது பேசி விளையாடியதை கண்டு
அவர்கள் மனம் மகிழ்ந்தது ...
நிச்சயம் சொல்வேன்
எனக்கு காதலர் தினம் என்பது
என் மீதான என் அன்னை அன்னையின் காதலை
கண்டு கொண்ட தினம்
இன்று ...