நீ வரும் வரை-11

(முன்கதை சுருக்கம்-ப்ரீத்தியின் கட்டாயத்தினால் அவளை ஏமாற்றவேண்டுமே என்பதற்காக ரவியின், பிரியாவும் வேறு வழியில்லாமல் அவள் முன்னே மோதிரம் மாற்றி கொள்கின்றனர்)

ரவி, பிரியா நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன், ரெண்டு பெரும் மோதிரம் கூட மாத்தியாச்சு, சரி சரி நீங்க பொய் பார்டிய என்ஜாய் பண்ணுங்க, எனக்கு உள்ள கொஞ்சம் வேலை இருக்கு, நான் அத முடிச்சிட்டு வந்துடறேன் என்று ப்ரீத்தி அங்கிருந்து கிளம்பிவிட்டாள்...

ஏய் ப்ரீத்தி இவளோட எதுக்குடி என்ன தனியா விட்டுட்டு கிளம்பற, அச்சச்சோ இவ பக்கத்துல நிக்கவே பயமா இருக்கே என்று மனதிற்குள்ளே புலம்பியபடி பிரியா முகத்தை திரும்பி பார்த்தான்...

பிரியாவோ மனதிற்குள் அழுதுகொண்டிருந்தது அவள் வாடிப்போன முகத்தை பார்த்த போதே ரவியால் உணர முடிந்தது...

பிரியா ரொம்ப சாரி, இப்படியெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சிருந்தா உன்ன நடிக்க சொல்லி இங்க கூட்டிட்டே வந்திருக்க மாட்டேன், தப்புலாம் என்மேல தான், உன் நிலமைய என்னால புரிஞ்சிக்க முடியுது....ஐ யம் ரியலி சாரி பிரியா என்று உண்மையாகவே மனம் வருந்தி ரவி சொன்ன விதம் பிரியாவால் மனத்தால் உணர்ந்து கொள்ள முடிந்தது...

தனக்காக ரவி வருத்தப்பட்டு பேசுவதை புரிந்துகொண்டவளாய் ரவி நடக்கறத யாராலயும் நிறுத்த முடியாது, ஏன்னா இதுலாம் நடக்கனும்னு இருந்துருக்கு...இதுக்கு நீயோ இல்ல நானோ என்ன பண்ண முடியும் என்று வாட்டமாக ஒரே வார்த்தையில் பதிலை கூறி தன் பேச்சை முடித்து கொண்ட பிரியாவை பார்க்க ரவிக்கு ஆச்சரியமாக இருந்தது....

எதுக்கெடுத்தாலும் பதிலுக்கு பதில் பேசி , ரவியின் கண்களுக்கு சண்டைகாரியாய் தெரிந்த பிரியாவா இவ்வளவு பெரிய காரியம் நடந்த போதும் இவ்வளவு நிதானமாக ஒரே வார்த்தையில் பதில் கூறினாள்...ரவியால் தன் கண்ணையும், காதையுமே நம்ப முடியவில்லை, பத்ரகாளியாய் சண்டைக்கு நிற்பாள் என்று நினைத்தால் இப்படி சாந்தசொருபினியாய் பொறுமையாய் நிற்கிறாளே என்று திகைத்து தான் போனான் ரவி....

தூரத்திலிருந்து இவர்களின் பேச்சை கவனித்தபடி ப்ரீத்தி வந்தாள்...என்ன ரவி புதுசா ஏதாவது திட்டம் போட ரெண்டு பேரும் ஐடியா செஞ்சுட்டு இருகிங்களா என்று கேட்ட படி வந்த ப்ரீத்தியின் பேச்சில் ஏதோ உள்குத்து இருந்ததை உணர்ந்தவர்களாக ப்ரீத்தியையே ஒன்றும் புரியாதவர்களாக ரவியும், பிரியாவும் பார்க்க....

அது ஒன்னும் இல்ல ரவி...நீங்க ரெண்டு பேரும் லவ்வர்ஸ்னு நிருபிக்க என் முன்னாடி நிறையவே நடிச்சிட்டிங்க, இதுக்கு மேலயும் நடிக்க எதாவாது பாக்கி இருக்கா... எப்படி ரவி இப்படி உண்மை மாதிரியே ரெண்டு பேரும் நடிக்கிறிங்க...இதுக்கு திரைகதை, வசனம் எல்லாம் நீ தானா இல்ல பிரியாவா என்று கேள்வியோடு நின்று கொண்டிருந்த ப்ரீத்தியை அதிர்ச்சியோடு பார்த்து கொண்டிருந்தனர் இருவரும்...

கொஞ்சம் தன்னை நிதானபடுத்திகொண்டவனாக "ப்ரீத்தி அது வந்து" என்று தயக்கத்தோடு ப்ரீத்திக்கு எப்படி உண்மை தெரிந்தது என்ற குழப்பத்தில் அதற்க்கு மேல் என்ன பேசுவது என்று புரியாமல் திகைத்து போய் நின்றுவிட்ட ரவியை பார்த்து ப்ரீத்தியே பேச ஆரம்பித்தாள்...

பிரியாவோ ஏற்கனவே அதிர்ச்சியில் இருக்க ப்ரீத்தி குடுத்த பேரதர்ச்சியில் என்ன செய்வது என்று தெரியாமல் பேசாமலே நின்றுவிட்டாள்...

ரவி எனக்கு எல்லா உண்மையும் தெரியும், நீ என்கிட்டே காதலிக்கிறேன்னு சொன்னதுமே நான் நம்ப தான் செஞ்சேன்...ஆனா லட்சியம், வேலைன்னு இருக்கற நீ காதலிப்பியானு சின்னதா சந்தேகம் வர உன்னோட ப்ரெண்ட் ராமுகிட்ட கேட்டு உண்மைய தெரிஞ்சிக்கிட்டேன்...உடனே ராமு மேல கொவபடாதே, முதல அவன் உண்மைய சொல்லல... நான் கெஞ்சி, மிரட்டி, அழுது இப்படி எல்லாம் செஞ்சபின்னாடி தான் அவன் என்கிட்டே நீ காதலிக்கனு உண்மைய சொன்னான்...

அப்போ தான் உன் மனச புரிஞ்சிக்கிட்டேன், இத பத்தி பேச தான் உனக்கு கால் பண்ணினேன், நீயோ பிரியா கூட இருக்கேன் அது இதுன்னு புதுசா ஒரு பொய்ய சொல்ல நானும் உன் பொய் எந்த அளவுக்கு போகுதுன்னு தான் பார்ப்போமேன்னு எனக்கு எதுவுமே தெரியாத மாதிரி உங்க டிராமால உங்களுக்கே தெரியாம நானும் நடிக்க ஆரம்பிச்சிட்டேன்...

ரவி நான் செஞ்சதுலாம் கொஞ்சம் ஓவர் தான்.. ரிங் போடறவரைக்கும் நான் செஞ்சது எல்லாமே ரொம்பவே ஓவர்னு நான் ஒத்துக்கறேன்...ஆனா அப்பவாது உன் வாயாலேயே நீ உண்மைய ஒத்துபேனு நினச்சேன்.. ஆனா நீயோ உண்மைய சொல்றத விட நான் சொல்றத செய்றதே மேல்னு நினச்சிட்ட...

இப்போ கூட நான் ஏன் எனக்கு உண்மை தெரியும்னு உன்கிட்ட சொல்லிட்டு இருக்கேன் தெரியுமா? பிரியா முகத்துக்காக தான்..ஆரம்பத்துல இருந்தே அவங்கள பாத்துட்டு தான் இருக்கேன்...உனக்கு ஊட்டி விட சொன்ன போதும், நீங்க ஒண்ணா நிக்கும் போதும்..கடைசியா ரிங் போட்ட போதும் அவங்க மனசு பட்ட கஷ்டம் அவங்க முகத்துல நான் பார்த்தேன்...

இதுக்கு மேலயும் பிரியாவ கஷ்டபடுத்த கூடாதுன்னு தான் இந்த டிராமாவ இப்பவே முடிக்கிறேன்....என்று ப்ரீத்தி வருத்ததோடு ரவியின் கண்களை பார்த்து உருக்கமாக பேசி முடிக்க, தான் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்பதை ரவி உணர ஆரம்பித்தான்....

ப்ரீத்தி நான் செஞ்சது பெரிய தப்பு தான், சாரி ப்ரீத்தி என்று வருத்தப்பட்ட ரவியை பேச விடாமல்...

இல்ல ரவி தப்பு எனது தான், நீ கல்யாணம் வேணாம்னு சொன்னப்பவே நான் புரிஞ்சிருக்கனும்....நான் தான் பிடிவாதம் பிடிச்சேன்...அதுக்கு காரணம் கூட உன்ன எனக்கு அவ்ளோ பிடிக்கும்...ஆனா உன்ன பிடிச்ச அளவுக்கு உன் மனச நான் புரிஞ்சிக்கல...சரி விடு தப்பு ரெண்டு பேருமே செஞ்சிருக்கோம்...இதுக்கு மேல இத பத்தி பேச வேண்டாம், எல்லாத்தையும் மறந்துடுவோம்,ஆனா நாம ரெண்டு பேரும் சேர்ந்து இப்போ மன்னிப்பு கேட்க வேண்டியது பிரியாகிட்ட தான்...பிரியா எங்கள மனிச்சிடு...எங்க பிரச்சனைல உன்ன நாங்க இப்படி கஷ்டபடுத்திருக்க கூடாது...எங்கள மனிச்சிடு பிரியா என்று ப்ரீத்தி கேட்க ரவியும் சாரி பிரியா, ரியலி சாரி பிரியா என்று ஓவராக மன்னிப்பு கோரிக்கையை அள்ளி கொட்ட சரி சரி நடந்ததுலாம் விடுங்க...இதுக்கு மேல என்ன விட்டுட்டாவே போதும்...என்று பிரியா தன் இயல்பு நிலைக்கு வந்தாள்...

ஆமா ரவி உன் பிரெண்ட்ஸ் எல்லாத்தையும் உள்ள கூப்டுவியா, இல்ல இன்னும் அவங்கள ரோட்லயே வெயிட் பண்ண வைக்க போறியா என்று ப்ரீத்தி கேட்க ஆமா இல்ல, மறந்தே போய்ட்டோம்....இது கூட உனக்கு தெரியுமா, பிராடு, எல்லாத்தையும் தெரிஞ்சி வச்சிக்கிட்டு என்னையே ஏமாத்திட இல்ல, உன்ன அப்புறமா பேசிக்கிறேன்...முதல அவங்கள கூட்டிட்டு வரேன் என்று செல்லமாக திட்டிவிட்டு ரவி வெளியே செல்ல அவர்கள் தொலைத்த நிம்மதி அவர்களிடமே திரும்பி வந்ததை போல் அங்கு இயல்பு நிலைமை வந்துவிட்டது...

என்கிட்டே எப்படிலாம் நடிச்சீங்க ரெண்டு பேரும் என்று ப்ரீத்தி ப்ரியாவை பார்த்து செல்லமாக கோவிக்க நீங்க மட்டும் என்ன லேசு பட்ட ஆளா, எங்களையே பயமுறுத்தி அழ வச்சிடீங்களே, எப்படி பயந்து போய்ட்டேன் தெரியுமா என்று ஒருவரை ஒருவர் மாறி மாறி செல்லமாக கோவித்துக்கொண்டு பின் கிண்டலும் செய்து கொண்டதில் இருவரின் மனமும் லேசானது, பிரச்சனை ஒருவழியாக தீர்ந்துவிட்டதை நினைத்து பிரியாவும் மனதுக்குள் மகிழ்ந்து கொண்டிருந்தாள் ....

ஆனால் அவள் வாழ்க்கையையே புரட்டி போடும் புயல் இனி தான் அவளை நெருங்க போகிறது என்பதை அறியாமல் அவள் செவ்விதழ்களில் புன்னகை தவழ்ந்து கொண்டிருந்தது...

எழுதியவர் : இந்திராணி (15-Feb-16, 3:13 pm)
சேர்த்தது : ராணிகோவிந்த்
பார்வை : 274

மேலே