தோல்விகளை அலசிப் பார்க்கையில்--------

~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~
இந்த முட்களைத் தொட்டு
காயப்படுத்திய கைகளை
ஆற்றும் மெல்லிய மிருதுவான
ரோஜாப்பூக்களின் தடவுகை போல
கவலைகளை களைந்து
காற்றை திசை எதிர்த்து
கிழித்து நிற்கிறது உணர்வு. ...!
எதையுமே கண்டு
பிரமிக்காத அவன்
தோல்விகளை தொட்டு
சங்கல்பம் செய்வதில்லை
அது சிந்தனையை
மூழ்த்தி விடும் என்பது
அவனுள் சித்தாந்தம் ஆகிறது !
எழுவதில் கர்வித்துக் கிடக்கும்
உள்ளங்கள்
விழுவதில் விசாலித்து மகிழ்கிறது !
நம்பிக்கை கொண்டெழுந்த
நிமிடங்களை
அத்திவாரம் தூர்க்கும்
விஷக்கிருமிகள்
அழித்து விடலாம் .....
ஆனால்
உலகையே உயிர்ப்பிக்க
முளைத்தவனெல்லாம்
தடை தகர்த்தி உறங்கிக் கிடந்து
உயிர் கொள்ளும் வீரிய விதைகள்
என்பது காலம் நகர்ந்த
புலர்தல்களில் புரியும். ...!
- பிரியத்தமிழ் -