திருப்பூவணம் பதிகம் 8

"வரைதனை யெடுத்தவல் லரக்கன் நீள்முடி
விரறனில் அடர்த்தவன் வெள்ளை நீற்றினன்
பொருபுனல் புடையணி பூவ ணந்தனைப்
பரவிய அடியவர்க் கில்லை பாவமே" 8

பதவுரை:

விரல்தனில் அடர்த்தவன் - கால் பெருவிரலால் ஊன்றி அழுத்தி, பணியச்செய்து அடக்கியவன்
பொருபுனல் புடையணி பூவணம் - கரையை மோதுகின்ற வைகைநீரை ஒரு பக்கத்திலேயணிந்த பூவணம்.

பொருளுரை:

கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த வலிமை வாய்ந்த அரக்கனான இராவணனின் நீளமான தலைமுடியைத் தன் கால் பெருவிரலால் ஊன்றி அழுத்தி, பணியச்செய்து அடக்கியவன், அவர்தம் திருமேனியில் வெண்மையான திருநீற்றினைப் பூசியிருப்பவன், கரையை மோதுகின்ற வைகை நதியை ஒரு பக்கத்திலே இருக்கப் பெற்ற திருப்பூவணம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கின்றவன் சிவபெருமான்.

அப்பெருமானைத் தொழுது போற்றும் அடியவர்களின் பாவம் முற்றிலும் அகலும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Feb-16, 10:11 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 51

சிறந்த கட்டுரைகள்

மேலே