திருப்பூவணம் பதிகம் 9

"நீர்மல்கு மலருறை வானும் மாலுமாய்ச்
சீர்மல்கு திருந்தடி சேர கிற்கிலர்
போர்மல்கு மழுவினன் மேய பூவணம்
ஏர்மல்கு மலர்புனைந் தேத்தல் இன்பமே" 9

பதவுரை:

நீர்மல்கும் மலர் - தாமரை;
பூவணம் வணங்குவதே முத்தியின்பமாம்.

பொருளுரை:

நீரில் வளரும் தாமரை மலரில் வீற்றிருக்கின்ற பிரமனும், திருமாலும், தன்னைத் தொழுபவர்களை நன்னெறிப் படுத்தும் இறைவனின் சிறந்த திருவடிகளைச் சேர்தற்கு இயலாதவராயினர். போர்த் தன்மையுடைய மழுப் படையுடைய சிவ பெருமான் வீற்றிருந்தருளுகின்ற இடம் திருப்பூவணம்.

அத்தகைய பூவணத்தை, பூவணத்தில் உறையும் சிவபெருமானை அழகிய மலர் கொண்டு போற்றுதல் இன்பம் தரும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Feb-16, 7:13 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 88

சிறந்த கட்டுரைகள்

மேலே