இயல்பு

அள்ளி வருவது ஆறு
கிள்ளி வருவது கீரை
துள்ளி வருவது குழந்தை

ஆடி வருவது கலை
தேடி வருவது அலை
பாடி வருவது பிள்ளை

திருடி கொள்வது தங்கம்
வருடிக் கொள்வது அங்கம்
நெருடிக் கொள்வது உள்ளம்

உறைந்து கொள்வது பனி
மறைந்து கொள்வது வெயில்
வரைந்து கொள்வது மனிதன்

தாவி வருவது கடல்
மேவி வருவது திடல்
தூவி வருவது சாரல்

இழுத்து செல்வது வலை
பழுத்துக் கொள்வது இலை
உளுத்துக் கொள்வது மரம்

தளர்ந்து செல்வது முதுமை
புலர்ந்து கொள்வது பொழுது
உணர்ந்து கொள்வது புலன்

எழுதியவர் : பாத்திமாமலர் (21-Feb-16, 12:39 pm)
Tanglish : iyalbu
பார்வை : 89

மேலே