எல்லாம் விதி

விடியலுக்கென்றே சில ராகங்கள்
விண்ணில் மறைந்திருக்கும் ஒலி கடத்திகள்
என் உள்ளே கேட்பதும் தெரிவதும்
என்ன மாய விந்தைகள்..
..
என்னை நெருங்கிய கைகளில் மலர்கள்
பூஜைக்கு வாங்கி போங்களேன் ஐயா
என்று கெஞ்சும் குரல்..
ஏறிட்டுப் பார்த்தேன் ..
பூஜைக்காக அல்ல ..
சிறுமியின் பசி நிவாரணத்திற்காக
அதை கூடையோடு வாங்கிக் கொண்டேன்..
கூடவே கொஞ்சம் பணம் சேர்த்து கொடுத்து!
..

சிலிர்த்து அடங்கிய மனது
சில்லிட்டுப் போகின்றது உணர்வு..
சிறு குழந்தைகள் ..
கல்விச்சாலைக்கு செல்லும் வயதில்
கோவில் வாசலில்
கர்ப்பகிரகமாய் நிற்கும் போது!
..
எல்லாம் விதி ..
என்கிறார்கள்..
கடக்க முடிவதில்லை ..
இருக்கலாம் என்று சொல்லி..
சுலபமாக..!

எழுதியவர் : பாலகங்காதரன் (கருணா) (23-Feb-16, 12:58 pm)
Tanglish : ellam vidhi
பார்வை : 831

மேலே