அத்தனையும் நல்லதே

சுட்டெரிக்கும், இரவில் குளிர் வாட்டும்
வனாந்திரங்களில் , நான்
தனியாக பயணிக்கிறேன்..
ஆனாலும்,
துணையாக என்னோடு
வெளியில் தெரியாது வருபவை
தான் எத்தனை..எத்தனை!

***
கிடைத்தது அத்தனையும் அரிதானதே
கொடுக்கிறேன் கையில் உள்ளதை
கொஞ்சமே தான் அவை
ஆனாலும் ..
நிறைவு தந்து
என்னில் நிறைபவை
தான் எத்தனை..எத்தனை!

***
எனக்கு சேர வேண்டியவை அல்லாத
எதனையும் தேடுவதில்லை..நான்
ஆனாலும்..
பயணத்தின் பாதையில்
எனக்கென்று அளிக்கப்பட்டவை
ஒன்று கூட விலக்கப்பட்ட கனிகள் அல்ல..
எனக்கென்று விளைந்தவை
தான் எத்தனை ..எத்தனை!

***

என்னையே ..
கொடுத்து விட முடிகிறது
வாழ்க்கையிடம் ..
ஆனாலும்..
வாழ்க்கை எனக்கு திருப்பிக் கொடுப்பதோ
நான் கொடுத்தவைகளையே..மடங்குகள்
தான் எத்தனை..எத்தனை!

***

புதிய பாதைகள்..புரியாத வழிகள்..
போகிறேன்..
ஆனாலும்
தொடர்ந்து முன்னேறுவது என்னவோ
அதே "நான்" தான் ..
அவை அத்தனையிலும் ஒளிந்திருக்கும்
முறையான நெறிகள்
தான்..எத்தனை எத்தனை ..!

***

இனிப்பையோ கசப்பையோ
எனக்கு தருவதில்லை வாழ்க்கை..
ஆனாலும்..
வாழ்க்கை எப்படியோ
இனிப்பை கசப்பாகவும்..
கசப்பை இனிப்பாகவும் பார்க்க
கற்றுக்கொடுக்கிறது ..வழிகள்
தான் எத்தனை..எத்தனை!

எழுதியவர் : பாலகங்காதரன் (கருணா) (23-Feb-16, 2:47 pm)
பார்வை : 249

மேலே