காகேபா

(14/02/2016
Madras university,Chennai)

மாலை 6 மணி...

அவர்கள் இருவரும் கல்லூரியின் முதல் தளத்தில் நின்றிருந்தனர்.அந்த அமைதியான மாலைப்பொழுது ரம்மியமாய் இருந்தது.கல்லூரியின் நுழைவாயிலிருந்து கல்லூரியின் பிரதான கட்டிடத்திற்கு வரும் பாதையின் இருபுறமும் மரங்கள்வளர்ந்து பூத்துக் குலுங்கிக்கொண்டிருந்தன.அவை வீசிய குளிர்க்காற்றும்,சிறு குருவிகள் எழுப்பும் ஒலியும்மனதிற்கு இதமளித்தன. ஆனாலும் இவற்றை மீறி அவர்கள் இருவருக்குமிடையே ஒரு இறுக்கம் நிலவியது.

சில நொடி மௌனத்திற்குப் பின் அவன் பேசினான்.

“எப்படி இருக்கீங்க?” அவன் பார்வை தூரத்தில் எங்கேயோ நிலைபெற்றிருந்தது

சில நொடிகள் மௌனம். பின் அவனைக் நோக்கித் திரும்பினாள்.

அவன் இவள் முகத்தைப் பார்க்க முயன்றான். அதற்கான மன வலிமையின்றிப் போய் தலைகுனிந்து கொண்டான்.

நான்..நான் நல்ல இருக்கேன்.. எதுக்கு வாங்க போங்கனு பேசுற கார்்த்திக்? “

“இல்ல..ரொம்ப வருஷம் ஆனதால..ஏதோ ஒரு .. சொல்லத் தெரியல..தயக்கம

"அவள் முகத்தில் ஒரு போலிப் புன்னகை.

“பரவாயில்ல கார்த்திக் .. வருஷம் தான் மாறிடுச்சு..நான் ஒன்னும் பெருசா மாறல"

“ம்ம்ம்..உங்க ஹஸ்பன்ட் ?...ஸாரி.உன்னோட ஹஸ்பன்ட்? குழந்தைங்க?”

“நல்லா இருக்காங்க... குழந்தைங்க இல்ல இன்னும்"

“ஓ..ஐ எம் வெரி ஸாரி.. எனக்குத் தெரியாது,,” முதல் முறையாய் தயக்கத்தோடு அவள் முகத்தைப் பார்த்தான்.

“ஸாரி எல்லாம் வேணாம் கார்த்திக். நீ என்னப் பார்க்குற தூரத்துலயோ, என்னப் பத்தி கேள்விப் படுற அளவுக்கு நம்மபிரெண்ட்ஸ் கூட நெருக்கமாவோ நான் இல்ல.. ரொம்பவும் விலகிட்டேன்.. ஏதோ அதிர்ஷ்டம்.. ஈமெயில் பாத்தேன்.. அவருக்கும் தமிழ்நாட்டுல நெக்ஸ்ட் ஒன் வீக் வேலை இருந்ததால வர முடிஞ்சுது

" “ஹ்ம்ம்..எதிர்பார்க்கல உன்ன

"அவள் மௌனித்திருந்தாள்.

“எதுக்கு வந்த நீ மிரா? ....நீ வரப்போறனு தெரிஞ்சிருந்தா நான் வந்திருக்கவே மாட்டேன

"அவள் லேசாய்ப் புன்னகைத்தாள்.

“எனக்கு உன்னப் பார்க்கணும் போல இருந்துது கார்த்திக்.. உனக்கு என்னப் பார்க்கப் பிடிக்காதுனு தெரியும்.. இருந்தாலும் .. உன்னப் பாக்கணும்..ஐ வான்டட் டூ சீ யூ" குரல் தழுதழுக்க , அந்தப்புறம் திரும்பி கைக்குட்டையால் கண்களை ஒத்திக்கொண்டாள்.

பேச நாவெழாமல் தவித்துப்போய்நின்றான் கார்த்திக்.

தொடரும்...

எழுதியவர் : satheesh (25-Feb-16, 3:20 pm)
பார்வை : 77

மேலே