வேண்டும் கடன்

முற்றத்தில்
எமைக்காண
வந்த சுற்றமே,

வெம்மையும்
வெண்மையும்
கடனாய்
பெற்ற வட்டமே,

தென்னை
இளங்கீற்றோடு
விளையாடும்
தென்றலோடு
மேகத்தேரில்
பவனிவரும் திங்களே.

ஓர் இரவு
என் வீட்டின்
வாசல் வருவாயோ?

வந்து
மனதால்
கேட்கும்
கடன் தருவாயோ?

வெண்மை
வெம்மையால்
மேகங்களை ஒளிர்கூட்டி

இருளின்
ஆணவத்திற்க்கு
கேள்வி
எழுப்பும் நாயகா.

என் வாழ்வின்
கருமை
இருளையும் போக்கவா!!!

கருமை
கடைந்து
பொழியும்
மேகம் வேண்டும்

கருமைக்கு
அர்த்தம்
கூறும் மோக
கூந்தல் வேண்டும்

மெலனின்
கூடியதல்
கூடிப்போன
கருமை
உமக்கு வேண்டாம்.

மொழியை
மாற்ற முடிந்தால்
வெண்மைக்கும்
கருமைக்கும்
அர்த்தம் மாற்றுவேன்.

நிறங்களை
மாற்ற
முடிந்தால்
இவற்றை
தூக்கி எறிவேன் .

நினைவை
மாற்ற
முடிந்தால்
அழிப்பேன் நினைவிலிருந்தே.

கருமை
காணாதே,
கருணை
காண்போம் வாதோழா!!!

இருந்தும்
சிலர்
கேட்பர்
அவர்களுக்காய்
கடன்க்கொடு வெண்மதியே...

இரா நவீன் குமார்

எழுதியவர் : இரா நவீன் குமார் (25-Feb-16, 3:54 pm)
Tanglish : vENtum kadan
பார்வை : 121

மேலே