கற்பனைக் குதிரை

எனது தவறுதான்
ஆமாம்
கடிவாளம் இல்லையென தெரிந்தும்
கட்டவிழ்த்து விட்டது எனது தவறுதான்

இப்போது
எங்கே ஓடிச் சென்றதோ தெரியவில்லை

ஒருவேளை

மேகத்தோடு ஓடி வானை அளந்து கொண்டிருக்கும்

மழையில் நனைந்து பிடறி சிலுப்பி கொண்டிருக்கும்

காட்டை மேய்ந்து களைப்பாறி கொண்டிருக்கும்

பூக்களின் இதழில் தாகம் தீர்த்து கொண்டிருக்கும்

மங்கையின் அழகில் மதியைத் தொலைத்து கொண்டிருக்கும்

மழலையின் சிரிப்பில் மயங்கி நின்று கொண்டிருக்கும்

காற்றோடு கலந்து கானம் பாடிக் கொண்டிருக்கும்

காதலின் காட்டில் கட்டவிழ்ந்து திரிந்து கொண்டிருக்கும்

ஜாதி மத அவலம் கண்டால்
சாட்டைக் கொண்டு அடித்துக் கொண்டிருக்கும்

இல்லாத கடவுளையும்
எங்கேயென தேடிக் கொண்டிருக்கும்

ஆமாம் காணவில்லை
" என் கற்பனைக் குதிரையை"

தெரிந்த வரை சொல்லி விட்டேன்
அது செல்லுமிடம் உங்களிடம்

யாரேனும் கண்டால்
என் கைகொண்டு தந்தால்
ஒரு கவிதைச் சன்மானம் தருகிறேன்

எழுதியவர் : மணி அமரன் (27-Feb-16, 6:48 pm)
Tanglish : karpanaik kuthirai
பார்வை : 92

மேலே