பித்தனா புத்தனா
நாளைய பொழுதின் நம்பிக்கையில்
நாட்கள் கடத்தும் வாழ்க்கையிது!
நல்லதும் கெட்டதும் நடப்பது தான்
நிஜத்தை உணரும் நற் பொழுது!
நலமாய் வாழ்க்கை அமைந்துவிட்டால்
ரசிப்பதும் ரசனையும் இருக்காது!
புத்தனாய் வாழ்ந்து பயனில்லை
வந்ததை ஏற்று வாழ்க்கையைச் ஓட்டு
பித்தனாய் வாழப் பழகி விடு!
வசதிகள் எல்லாம் வாழும் வரை
இன்பமும் துன்பமும் சாவில் இல்லை!
அனுபவம் என்பது அகம் கொள்ளும் அழகு
அளவே இல்லா அற்புதம்!
பயமாய் வாழ்ந்து பழகி விட்டால்
சாவின் பிடியில் தினப்பொழுது!
வாழ்க்கையின் காலம் உறுதியில்லை
வாழும் காலத்தை விருந்தளிப்போம்!