குறள்-வெண்பா

கனவெனும் பூக்களை கண்களில் வைத்து
நனவென மாற்றத் துடி

கடலின் மடியில் கதிரொளி பாய்ச்சும்
திடமுடன் செய்வாய் பணி

விதியின் சுழலில் நனைந்தெழும் நேரம்
மதியின் மயக்கம் தெளி

பாயும் நதிவழி பள்ளம் மறைந்தது
நீயுமுன் துன்பம் துடை

உதிரும் இலையில் உலகியல் நீதி
விதியின் சுழற்சி என

விழியின் விளிம்பில் நதியின் பொழிவென
வழிவது அன்பெனக் கொள்

விதைகள் வளர்ந்து விருட்சமாய் நின்றே
கதைக்கும் கதைகள் கேள்

நிலவின் மடியினில் நெஞ்சம் கிடத்தி
நிலவும் துயரம் மற

மழையின் துளியில் மகிழ்ந்து கிடக்க
விழையும் மனதில் திளை

எழுதியவர் : (28-Feb-16, 11:12 pm)
பார்வை : 114

மேலே