அவன் இவன்

ஒரு ஓடும் பேருந்து....
ஒத்த வயதுடைய முன்பருவத்து இளைஞர்கள்...
அருகருகே ஈரிருக்கை...

அவன் நல்ல உடையில்..
இவன் உடையில்...

அவன் ஸ்மார்ட் போனில்..
இவன் களைப்புடன் உறக்கத்தில்..

அவன் கல்லூரி முடிந்து போகிறான்..
இவன் லாரி பட்டறை வேலை முடிந்து போகிறான்..

அவனுக்கு வறுமை தூரத்து சொந்தம்..
இவனுக்கு உடன் பிறப்பு...

அவன் எந்த சாமியை கும்பிட்டானாே..
இவன் எந்த சாமியை விட்டுவிட்டானோ தெரியவில்லை...

ஒன்று மட்டும் நிச்சயம்.!

அவன் வளர்க்கப்படுகிறான்..!!!
இவன் செதுக்கப்படுகிறான்.!!!!

எழுதியவர் : கிருஷ்ணா (29-Feb-16, 10:17 pm)
Tanglish : avan ivan
பார்வை : 121

மேலே