என் இதயம் பேசும் வரத்தை
என் இதயம் பேசும் வரத்தை நான் அறிவேன்
முதல் முறை உன்னாலே
உன் கை கோர்த்து வீதியில் நடக்க
விண்வெளியில் நிலவொளியில்
பறந்தேன் தன்னாலே
உயிரே முதல் முறை இதயம்
இடம் மாற சொல்லுதே
உசுரை ஒன்றோடொன்று நெய்யுதே
வியர்வை மழை கொல்லுதே
பொன்மயிலே உன்னால் எல்லாம்
நெஞ்சம் கொதிக்குது உண்மையிலே
முதல் முறை முதல் முறை
என் இதயம் நீ சொன்னது பொன்மயிலே
முதல் முறை முதல் முறை
என் இதயம் நீ சொல்லுது உண்மையிலே
யாரும் இல்லா தனிமையில்
இருள் பேசும் வார்த்தையில்
வெண்மதியே உன் வெட்கம் நான் அறிவேன்
பக்கம் வர தயங்கையில் உன் விழி பேசும் என் ஆண்மையில்
பெண் நதியே உன் மோகம் நான் உணர்வேன்
என் பொன்மயிலே உன்னில்
வாழ்ந்தேன் உண்மையிலே
இருள் வீசும் வாசனையில்
விரல் கூசும் அர்ச்சனையில்
கனா காண நெஞ்சம் தடம் மாறுதே
வினவிற்குள் விடை தேடுதே
உன்னாலே பொன்மயிலே
நெஞ்சம் தள்ளாடும் உண்மையிலே
கனவிலும் நினைவிலும் கண்ணோடு பொன்மயிலே
உயிரிலும் உணர்விலும் என்னோடு உண்மையிலே
என் இதயம் பேசும் வரத்தை நான் அறிவேன்
முதல் முறை பொன்மயிலே
உன் கை கோர்த்து வீதியில் நடக்க
விண்வெளியில் நிலவொளியில்
பறந்தேன் உண்மையிலே