ஹைகூ
வாசலில் கோலம்
சாணத்தில் பூசணிப் பூ
மார்கழி மாதம். 1.
என்னைச் சுற்றிலும்
கொசுக்களின் ரீங்காரம்
யாருமில்லை அருகில் 2.
மாலைக் குளிர்காற்று
பறவைகள் தாழப் பறக்கின்றன
மரத்தைத் தேடி. 3.
வைகறை நிலவி்ல்
வழிந்து ஓடியது ஆறு
கடந்த காலத்திற்கு 4.
நான்கு ஆப்பிள் பழங்கள்
அளவில் நிறத்தில் வேறு
நாலும் தெரிந்தவன். 5.
.
வாசம் வீசியது
எந்தப் பூவில் இருந்து
பெயர் தெரியவில்லை 6,
அவள் பிறந்த நாள்
கடலைப் பார் என்றேன்
கரையை எப்படி முத்தமிடுகிறது 7.
யாருமற்ற வெளியில்
தழைத்துப் பரவிக் கிடந்தன
தொட்டாற் சிணுங்கிகள்.. 8.
என்னைப் பிரிகையில்
ஒன்று விடாமல் எடுத்தாள்
நினைவே நரகமாம். 9.
வரி விளம்பரம்
சாதிமதம் பாதகம் இல்லை
முதிர் கண்ணிக்கு. 10.
மாடியில் பாயில்
அமர்ந்து வானைப் பார்க்க
நிலவில் ஒளியில்லை. 11.
குளிர் நிலவில்
நாங்கள் படுத்து உறங்கினோம்
அண்ணன் தங்கையாக. 12.