சின்னம் ஒதுக்கச் சொல்லி வழக்கு

என்னடா புதுக் கட்சிங்க பத்தும் ஒரே சின்னத்த அவுங்களுக்குத் தான் ஒதுக்கணும் தேர்தல் கமிஷன்கிட்ட கேட்டாங்களாமே அது என்ன ஆச்சு?
@
ஆமாண்டா. தொடப்பம் ஆம் ஆத்மி கட்சியோட சின்னம். . ஆந்திராவிலே கிரண் குமார் தொடங்கிய கட்சியின் சின்னம் செருப்பு. இப்ப பாக்கி இருக்கறது மொறம் மட்டும். கிராம மக்களின் வாக்கு வங்கியை முழுசா அறுவடை செய்ய புதுசா மொளைச்சிருக்கற பத்துக் கட்சிகளும் மொறத்துக்குப் போட்டி போடறாங்களாம். தேர்தல் கமிஷன் யாருக்கும் ஒதுக்கமுடியாதுன்னு சொல்லிருச்சாம். அதனால அந்தப் பத்து கட்சிங்களும் தனித் தனியா உச்ச நீதி மன்றத்திலே வழக்குப் போட்டிருக்காங்கடா.

எழுதியவர் : மலர் (6-Mar-16, 11:41 am)
பார்வை : 106

மேலே