ராஜ ராஜ சோழனே நீ வாழ்க
காவிரி கரம் தந்த
தமிழ் காதலனே நீ வாழ்க !...
தமிழ் கவிதை சொல்லத்துடிக்கும்-
கரந்தை நாயகனே நீ வாழ்க !......
இல்லை என்ற நிலை
இல்லை இல்லை எங்கும் இல்லை...
உன் இரு கரம் வழங்கா செல்வம்
இவ்வுலகில் ஏதுமில்லை;
எல்லைகள் என்று ஒன்றில்லை
உன் இமை கண்ட இடம் அனைத்தும்
இன்னொருவன் கையில் இல்லை;
வரலாறு சொல்லும்
சோழத்தின் முன்னுரையே-
உன் நிகர் என்று சொல்ல
இப்புவியில் ஒன்றும் இல்லை;
கன்னித்தமிழ் அமுதை
கடல்தாண்டி கொண்டு சென்று
எங்கும் நம் தமிழ் என
இன்பம் தந்தவனே ..நீ வாழ்க!...
கலையின் வரையரையாய்
பெரிய கோவில் தந்த-
ஆயக்கலை அனைத்தும் கற்ற
அருள்மொழி வேந்தரே ...நீ வாழ்க!..
.வீரத்தின் பொருள் தந்து
விண்ணுலகை வெற்றி கண்டு
மன்னாதி மன்னனாய்
மக்கள் மனதில் வாழும்
தஞ்சை மண் தந்த
தமிழ் மகனே
நீ வாழ்க! ...நீ வாழ்க!...நீ வாழ்க!....