மவிக

என்னடா ஊரு முழுவதும் ம.வி.க - ன்னு சுவரொட்டிங்கள ஒட்டிருக்காங்க. அந்தச் சுவரொட்டிகள்ல மது பாட்டில் படம் போட்டுருக்காங்க?
#
நண்பா முத்தப்பா, ம.வி.க-ன்னா மது விரும்பிகள் கழகம் -ங்கற ஒரு புதிய கட்சியை ஆரம்பிச்சாருக்காங்க. மது பாட்டில் தான் அந்தக் கட்சியின் சின்னமாம். ஆனா அந்தக் கட்சி தேர்தல் களத்திலே குதிக்காதாம். தமிழகத்தில் உள்ள மது விரும்பிகள் அத்தனை பேரும் மதுவிலக்கை அமல் படுத்துவோம்னு சொல்லற எந்தக் கட்சிக்கும் வாக்களிக்கமாட்டாங்களாம். தமிழகத்தில் மதுவிலக்கு சாத்தியமில்லைனு அறிவிச்ச கட்சிக்குத் தான் வாக்களிப்பாங்களாம். தெனம் குடிச்சுட்டு தெருத் தெருவா வீடு வீடாப் போய் அந்தக் கட்சிக்குப் பிரச்சாரம் பண்ணுவாங்களாம்.
@
அட நண்பா நல்லப்பா, நல்லவேளை நாம ரண்டு பேரும் டாஸ்மாக்கர்களா இல்ல.

எழுதியவர் : மலர் (7-Mar-16, 2:03 pm)
பார்வை : 107

மேலே