திருமதி
கல்யாணத்திற்கு முன்
கோல மயில் அவள்
அவர்கள் வீட்டில்;
தாலி கட்டி என்னவளாக்கியதும்
எங்கள் வீட்டு வேலைக்காரியானாள்.!
திறத்தால் குணத்தால்
என் எஜமானியானாள்..!
இருந்தும்
சூரியனை எழுப்பிவிட்டு
நிலவை உறங்கச் செய்பவள்
வெறும் ஹவுஸ் ஒய்ப் என்றே
அறிமுகமாகிறாள் எங்கும்!