முகம் மாறாத சிரிப்புடன் பெண்கள்

என் மனம்
நீரில் உள்ள மீன் போல
என் நினைவுகளில் நீந்தித்
தத்தளிக்கிறது!

மென்பொருள்
அலுவலங்களில் வேலை,
நிறைந்த சம்பளம்,
முதிர் கன்னிகள்!

செவ்வாய் தோசம்
பெண் கிடைக்கவில்லை
திருமணமாகாத வாலிபர்கள்!

கணவனும், மனைவியும்
மென்பொருள் அலுவலங்களில்
வெவேறு நாட்டில் வேலை:
விமான நிலையங்களில்
சந்தித்துக் கொள்கிறார்கள்!

முகம் மாறாத சிரிப்புடன்
பெண்கள் இருக்கும் நாட்டில்
ஆண்கள் என்றும் பாக்கியசாலிகள்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Mar-16, 10:21 pm)
பார்வை : 189

மேலே