புதுமை பெண் இவள்

என்னவளே!!!

பிற பெண்னிடமும் கற்புண்டு
உன் போல் இல்லை அதன் சிறப்பு

கண்னி பெண்கள் பலர் இருக்க
கண் கொண்டு பார்பேனா? அவை
அனைத்தும் நின் கால் தூசியில்
கலந்து போக.....

என்னவள் நீயிருக்க யார் வேண்டும்?
எனை மடிமீது தலை சாய்க்க
உற்றவள் நீயிருக்க உன் பெயர்
மட்டும் சொல்லுமே!!!
என் கல்லறை கதவும்...

என்னவள் யார் என அறியா!!!
காலம் அது....
நிழல் ஒன்று நான் காண
எனை நோக்கி அது வர
தீ பட்டு வாடா! கயவர் கால்கள்
நிழல் பட்டு துடிக்க
நான் மட்டும் விதிவிலக்கா!!!

உன் கற்பை நான் அறிவேன்.
பத்தினி என்றால் பச்சை வாழை
அதை எரிக்க வை என
ஊரான் சிரிக்க...
பார்வையற்று போனானே!!!
பத்தினி உன் பார்வையாள்

உன் சிறப்பை நான் வரைய
தகுதி இன்றி நான் தயங்க
ஆண் மகன் இல்லை இப்பூவுலகில்
உன் போல் ஒருவன் என்றே...
நீ மொழிய
என்னுயிர் சேருமே சொர்கலோகம்...

எழுதியவர் : சிவா (8-Mar-16, 5:00 pm)
Tanglish : puthumai pen ival
பார்வை : 350

மேலே