இதயத்தில் பாட்டெடுத்தேன்

பாடாத பாட்டெல்லாம்
இதயத்தில் பாடிவைச்சேன்
பேசாத மொழியெல்லாம்
விழியினிலே பேசிவைச்சேன்
பாக்காத நாணத்தை முகத்தினிலே தேக்கிவைச்சேன்
பருவத்து கோட்டையிலே
மன்மதனின் மனதினிலே
நான் மாடா புறா போலமர
என்னோட விழியினிலே
காதல் மீன் துள்ளிவர
உன் தூண்டில் பார்வையிலே
பாவை மீன் நாடிவர
உன் நெஞ்சோர மடியினிலே
பாவையவள் துள்ளிவிழ
காதலின் துடிப்பினிலே இறந்தே நான் மடிந்துவிட்டேன்
உந்தன் நெஞ்சில்

எழுதியவர் : செல்வம் சௌம்யா (9-Mar-16, 5:15 pm)
சேர்த்தது : செல்வம் சௌம்யா
பார்வை : 60

மேலே