அவள் அப்படி

என் இருவிழியை இருளில் கொடுத்தேன்
நின் திருவிழி வழியே ஒளிவிடுத்தாய்...
சுருள் முடியால் யாழ் வளைத்து
என் உயிர் நரம்பால் நீ இசைத்தாய்...
இதழுக்கு நிறம் விதைத்து
என் உயிருக்கு குழி பறித்தாய்...
ஒற்றை நிற வானவில் இரண்டு
உன் நெற்றி மேலே உதித்ததென்ன...
பற்ற வைத்த நெகிழியாய்,நெஞ்சும் நீ பார்க்கும் போதே உருகுவதென்ன..??