வேற்றுகிரகவாசி

அந்த வேற்றுகிரகவாசி
தயங்கியது!

மறைந்து நின்று
அந்த வேற்றுகிரக வாசி
பூமி பார்க்கிறது!!

தன் உலகத்தின் எல்லையை
கடந்ததில் புவியீர்ப்பின்
கோளாரால்
இந்த பூமி நோக்கி
அந்ந ஒற்றை வேற்றுகிரக வாசி
விழுந்தது!

உலகம் பார்த்து வியந்தது!!
உள்ளுக்குள் சற்று பயந்தது!

இதோ!!!!இது???இது??

இது என்ன உலகம்?

யார் இவர்கள்?

ஏன் அதிவேக பயணம்
கொள்கிறார்கள்?

ஓ!!!இது என்ன??

இவர்களுக்கு இரண்டு
கண்கள்???
நம் இனத்தில் நெற்றியின்
நடுவில் ஒன்று தானே!!

இதோ இவர்கள்
ஆண்பாலும்,பெண்பாலும்
அறியாதவரோ??

ஐய்யகோ!! என் கிரகத்தலைவரே!

இருபாலினமும் தனக்கு
முன் நிர்வாணமாய் நிற்கிறார்களே!!

மகாபாவம் அல்லவா?

தண்டனைகள் என்பது
இங்குண்டா??இல்லையா??

அதோ!!!
இது என்ன??

மரணத்திற்க்கு அழுகிறார்கள்??

இன்னொரு கருவில் பிறக்கும்
ஜீவனுக்கு உயிர் இந்த
ஆவி தானே!
மீண்டும் உலகம் வருவதை கூட
இவர்களுக்கு தெரியவிவ்லையே!

அய்யோ!!!!
என் தலைவரே
இதைப்பார்த்தற்க்கு என்னை
மன்னித்துவிடு!

இங்கே,இந்த மடையர்கள்
நாம் தாய்போல் நினைக்கும்
கடலின் மேல் வாகனம்
ஓட்டி விளையாடுகிறார்கள்!!

இந்த பாவம் கழுவ
இவர்கள் என்ன செய்வார்கள்??

இதோ!!!
இது என்னது??

ஏதோ மதம் என்று பேசுகிறார்கள்??

மூடமனிதர் இறைவன்
என்பவன் ஒருத்தன் என்பதை
இன்னுமா அறியவில்லை!!

அய்யகோ!!
தவறுமேல் தவறு செய்கிறார்களே!!!

ஏதோ,ஜாதி என்ற பெயரில்
இறைவன் எடுக்கும் உயிரை
இங்கே மனிதர்கள் எடுக்கிறார்!!!

கொடூர மனிதர்கள்!

இது என்ன ??

ஆ!!!இது தெரியும்!

எங்கள் இனத்தவர் குளிக்கும்
போது தெரிக்கும் துளிகளை
மழை என்று சொல்கிறார்கள்!!

இவர்கள் மடையர்கள் தான்!!

உயிரோடு இருக்கும் ஆட்டை
அறுக்கிறார்கள்!
கோழிகள் என்ன பாவம்
செய்ததோ!??!


இருங்கள்!!
உங்கள் இனத்தைஅழிக்க
எங்கள் படைகளை திரட்டி
வருவேன்!


அய்யோ!!!
அவர்கள் என்னை பார்த்துவிட்டார்களே!

எங்கு போவது???

என்னை விடுங்கள் !என்னை விடுங்கள்!

ஆ!!
என்னை கோழி என்று
நினைத்து விட்டார்களே!!

அந்த வேற்றுகிரக வாசி
தலை துண்டித்துப்போனதில்
அந்த கிரகவாசியின்
கனவு கலைந்தது!!

பூமி என்ற பெயர் கேட்டாலே
அது மட்டும் பதினொரடி
தள்ளியே நிற்க்கும்!!!

எழுதியவர் : (11-Mar-16, 12:32 pm)
சேர்த்தது : Ijaz R Ijas
பார்வை : 72

மேலே