கருணாலய நிதியே – ஹிந்தோளம்

கவி வேதநாயகம் பிள்ளையின் மிக பிரபலமான பாடல் ’கருணாலய நிதியே – தினமும் உன் சரணாம்புயம் கதியே’ என்பதாகும். சில நாட்களுக்கு முன், என் உறவினர், மூத்த குரலிசைப் பாடகர், இசை மேதை திரு.T.S.R.சதாசிவம் (87 வயது) அவர்களிடம் தொலைபேசியில் பேசிய போது, வேதநாயகம் பிள்ளையின் ‘சர்வசமய சமரசக் கீர்த்தனைகள்’ என்ற பழைய புத்தகம் ஒன்று கிடைத்தது என்று சொன்னேன்.

உடன் ’கருணாலய நிதியே’ என்ற இந்தப் பிரபலப் பாடலைக் கூறி, ஹிந்தோள ராகத்தில் அமைந்தது என்றும் சொல்லி தொலைபேசியிலேயே கணீரென்ற இனிமையான குரலுடன் ஸ்வரத்துடன் பாடிக் காண்பித்தார். இப்பாடலை பிலஹரி, ஹம்சாநந்தி ராகங்களிலும் பாடலாம் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

இவருடைய குரு சித்தூர் சுப்ரமணிய பிள்ளை. பல மேடைகளில் மதுரை S.சோமுவுடனும், தனி இசை நிகழ்ச்சிகளிலும் பாடிப் பிரபலமானவர். இவரது பாட்டுத் திறனும், குரலினிமையும் பாராட்டப்பட்டு, சங்கீத வித்வ சிரோன்மணி, சங்கீத கான ரத்ன என்ற பல பட்டங்கள் பெற்றவர்.

கருணாலய நிதியே

பல்லவி

கருணாலய நிதியே – தினமும் உன்
சரணாம்புயம் கதியே (கருணா)

அநுபல்லவி

சர்வபே தவிநோ தகாரண
பரமசா தகபவ நிவாரண (கருணா)

சரணங்கள்

நிதம் வெளுக்க…..வெளுக்க வெண் தூசு
நிமிஷந்தோறும்………….நிறையுமே மாசு
அதுபோல் என்தன்……….அகமுறும் ஆசு
அகலவே உன்…………….அருள் ஒளி வீச
அகிலகோடி…………………..விசாலகற்பித
சகலஜீவதயாள……………………….அற்புத (கருணா)

இங்கென் செய்கைகள்…யாவும் நிகிர்ஷ்டம்
எனக்குப் புண்ணியம்…..என்றும் அநிஷ்டம்
பங்கம் தீர்க்கில்…..உனக்குண்டோ கஷ்டம்
பரமனேயருளாயோ……………உத்கிரிஷ்டம்
பாரமாகவே…………………பண்ணும் பாதகம்
தீரவே நீசெய்வை……………………..சாதகம் (கருணா)

அமலபாஷ்கரா……………….கோடிசொரூபா
அகண்ட சச்சிதானந்த………………பிரதாபா
நிமலவேத…………………..வேதாந்த நிரூபா
நிர்விகற்ப………………………வரஞ்சன தீபா
நீதபூரண…………………………நிலயமஞ்சித
வேதநாயகன்……………………இதயரஞ்சித (கருணா)

நிகிர்ஷ்டம், அநிஷ்டம், உத்கிரிஷ்டம், வரஞ்சன, நீதபூரண, நிலயமஞ்சித போன்ற சொற்களுக்கு பொருள் விளங்கவில்லை. 1940 களில் இருந்த வழக்கு மொழிச் சொற்களாக இருக்கலாம்.

ஹிந்தோள ராகத்தில் அமைந்த வேறு சில பிரபலப் பாடல்கள்:

1. ராமனுக்கு மன்னன் முடி தரித்தாலே
2. நம்பிக் கேட்டவர் எவரையா - பாபநாசம் சிவன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-Mar-16, 8:42 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 117

மேலே