இளமை ஊஞ்சலாடுகிறது

அதென்ன அப்படியொரு அவசரம்;
காதலிக்கவும்,
கைகழுவவும்.

காதலை
நம்பவும் முடியாமல்
காதலனை
நம்பவும் விரும்பாமல்

பார்த்த படித்த ரசித்த
எத்தனையோ கதைகளில்
அவசர கதியில்
அள்ளித்தெளித்து

போட்ட கோலங்களை
அழித்து மறைத்து
உள்ளுக்குள் உடைந்து
வெளியில் மெருகிழந்து
மேன்மையைத்தொலைக்கும்

"கண்களே, கண்களே
காதல் செய்வதை விட்டு விடுங்கள்...!

பெண்களே, பெண்களே
வாலிபரை கொஞ்சம் வாழ விடுங்கள்...........!"

எழுதியவர் : செல்வமணி (13-Mar-16, 10:43 pm)
பார்வை : 324

மேலே