மனீஷா பஞ்சகம் ஐந்து நம்பிக்கை ஆதி முனிவன் சங்கரன் 3 விடை 1

கங்கைக் கரையில் நீராடி வரும் ஆதி முனிவனை எதிர்கொள்கிறான்
ஒரு சண்டாளன். சங்கரர் அவனை தூர விலகிப்போ என்கிறார் .

எது விலக வேண்டும் இந்த உடலா அல்லது உள்ளிருக்கும் ஆன்மாவா
எது என்று முதல் வினா எழுப்புகிறான் .

உலகிற்கு ஒளி தரும் ஆதவன் கங்கை நீர் என்றும் சண்டாளன் வீட்டுச்
சாக்கடை என்றும் பேதம் பாராட்டுகிறதா ?
அல்லது இந்த ஆகாயம் பொற் குடத்தில் விரிந்தது அல்லது மண் குடத்தில்
விரிந்தது என்று பேதம் காண்கிறதா ?
அத்துவைத வேதாந்த தத்துவத்தை உலகிற்கு உரைக்க வந்த மா முனிவ
உனக்கிந்த பேதமும் மோகமும் எங்கிருந்து வந்தது என்று ஆச்சரியமான
இரண்டாவது வினாவையும் எழுப்புகிறான் .

இனி பஞ்சகம் எனும் இந்நூலின் ஐந்து விடைகள் :--


முதல் விடையில் யார் தனக்கு குரு என்பதை சங்கரர் சொல்கிறார் .


ஜாக்ரத் ஸ்வப்ன ஸுஷுப்திஷு ஸ் ஃ புடதரா யா ஸம்விதுஜ்ஜ்ரும்பதே

யா ப்ரஹ்மாதி பிபீலிகாந்ததனுஷு ப்ரோதா ஜகத் ஸாக்ஷிணீ

சைவாஹம் ந ச த்ருச்யவஸ்த்விதி த்ருடப் ப்ரஜ்ஞாபி யஸ்யாஸ்தி சேத்

சாண்டலோஅஸ்து ஸ து த்விஜோஅஸ்து குருரித்யேஷா மனீஷா மம || 1 ||

விழிப்பில் கனவில் உறக்கத் தினில்தெளிவாய்
தூய உணர்வாய் வெளிப்படுமோ அவ்வுணர்வு
தாமரையோன் ஆதிஎறும்பு ஈறாக ஊடுருவி
எல்லா உடலிலும் நிற்கும் சகத்சாட்சி
அந்த ஒருபொருளே நான்காண் பதற்கில்லை
இத்திட ஞானத்தை பெற்றிட்ட பின்னினி
அந்தணனோ சண்டாள னோயவனே என்குரு
ஈதென் திடநம்பிக் கை ||1||
(மனீஷா மம )

மூலப்பாவின் பொருள் வழியில் தமிழ் வெண்பா வடிவில் தந்திருக்கிறேன்
மேலும் பார்ப்போம் .
யாப்பு ஆன்மீக ஆர்வலர்கள் படிக்க .
----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (14-Mar-16, 7:45 pm)
பார்வை : 95

மேலே