சில துளிகள்

தெரு விளக்கெல்லாம்
தவறாமல் எரிகிறது
எங்கள் தெருவில்...

கொத்து கொத்தாய்
பூத்தும் தலையில் சூடமுடியவில்லை
எருக்கம் பூ...

காதலர்களால்
காவியமானது
கஸல்..

மழை நீர்
சேரும் இடத்தை பொறுத்தே
மாறுகிறது..

வயது ஏற ஏற‌
வாலிபம் திரும்புகிறது
எழுத்துக்கு..

எழுதியவர் : வே புனிதா வேளாங்கண்ணி (15-Mar-16, 7:41 pm)
பார்வை : 103

மேலே