முதுமொழி -சுஜய் ரகு

தேசங்களின்
சமத்துவ முதுமொழி பசி
அதன் அரைஜான்
இலக்கியம் பயிலாதோர்
யார் உலகில்

தனது ஒப்பற்ற தத்துவத்தில்
அறிவியல்
ஞானம் பேசுகிறது
வரலாறு ஒப்புவிப்பதெல்லாம்
"வலி வறுமையெனும் வலி"

அலைகளற்ற
ஓர் அமானுஷ்யக் கடல்போல்
வறுமை
வியாபிக்கிறது வாழ்வை
செத்து மிதக்கின்றன
மானுட மீன்கள்

இரைக்காக ஒன்றும்
இரையாக ஒன்றும்
காத்திருத்தல் நியதியாகிறது

ஒரு திசை
கோடையில் கருக
எதிர் திசை
மழையில் மிதக்க
இயல்பு பழகிவிட்டது

மரம் ஒன்றுதான்
கிளைகள் தான் வெவ்வேறு
வலி ஒன்றுதான்
வாழ்க்கைதான் வெவ்வேறு

பட்டினிச் சாவை
பார்த்தால் என்ன
படித்தறிந்தால் என்ன

உன் விழிகள்
ஈரம் சொட்டுவதில்
உணர்த்திவிடுகிறாய்-நீ
இந்த உலகுக்கு

மனிதனே சாகிறான்
மனிதம் சாவதில்லையென...!

எழுதியவர் : சுஜய் ரகு (16-Mar-16, 10:16 am)
பார்வை : 130

மேலே