காத்திருப்பு

ஆசைகளுடன் ஏக்கம்
நாளைய கனவுகளுடன்
நம்பாமல் நம்பி
காத்திருப்பு

நம்பிக்கையின் உச்சம்
காலம் கனிய
சந்தர்ப்பங்கள் நோக்கி
காத்திருப்பு

நாளும் காதல் பேசி
காதலிடம் காதல் கனிய
காதல் எண்ணி காதலுடன்
காத்திருப்பு

வர சொன்ன நண்பன்
வரவில்லை என்று
கடிந்து கொண்டு நண்பனுக்கு
காத்திருப்பு

காலை வேலைக்கு சென்ற
கணவன் மாலை மலர்களுடன்
புதுமனைவியின் கதவருகில்
காத்திருப்பு

நாளை முதல் கோடைவிடுமுறை
என்றெண்ணி நாளது
கடக்க பிள்ளைகள்
காத்திருப்பு

இருப்புகள், நடப்புகள்
ஆசைகள், இச்சைகள்
காதல், வாழ்தல்
உள்ளதது காத்திருப்பு

கோபங்கள் தாபங்கள்
காயங்கள் மாயங்கள்
விருப்பங்கள் எண்ணங்கள்
காத்திருப்பில் உண்டு


விதைகள் விதைத்தவுடன்
மரங்கள் வளர்வதில்லை
கனிகள் காய்ப்பதில்லை

காலத்துடன் ஒன்றும்
காரியத்தில் ஒவ்வொன்றிலும்
காத்திருப்பு கட்டாயம்

- செல்வா

எழுதியவர் : செல்வா (16-Mar-16, 11:04 pm)
Tanglish : kaathiruppu
பார்வை : 121

மேலே