சாதியை சாதி அறுத்தது
சாதியை
சாதி இங்கே
அறுத்தது....
வாழ நினைத்தவளின்
தாலியை
அறுத்தது.....இப்
பூமியில்
வாழவே
வெறுத்துப் போனது.....!
தனித்துப்
போனவளின்
துன்பத்திற்கு
இந்த
சாதித் தலைமை
அப்படி என்ன
கொடுத்துவிடப்
போகுது.....???
கருணைக் கொலைக்கு
மனுக்கொடுக்கும்
காலத்தில்
வாழ்கிறோம்.....இல்லை
கருணையே
இல்லாத..... அறிவில்லாத
அரிவாள்
கரங்களின்
நடுவே
வாழ்கிறோம்......!
மனம்
கொண்டு
மணம் கண்ட
அந்த மனம்
இன்று
பிணமாகிப்
போனதே.....!??
அறுத்துப் போட
ஆணையிட்ட
ஆசாமியே......சாமிதனை
நீயும்
வேண்டித்தான்
போனாயா......????
அனல் பறக்கும்
விவாதங்கள்.....இந்த
ஆணவக் கொலை
பற்றி.....
ஆனாலும்
அந்தப் பெட்டியும்
அடங்கியே
போனது.....!!
கருவாகி
உருவாகி
உங்களின்
கனவாகி
உருவான
உன் பிள்ளையின்
தவறுகளை
மன்னிக்கத் தெரியாத
மனுஷ
ஜென்மங்கள்
இனிமேலும்
ஜனனிக்க
வேண்டாமே
இந்தப் பூமியிலே.....!!!
இறந்த
நண்பர் ஷங்கரின்
ஆத்மா சாந்தியடைய
எழுத்தின் நண்பர்களுடன்
பிரார்த்திக்கிறேன்...!!!
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி