மனசு - நேரில் சொல்ல மறைத்ததும் நினைவில் சொல்ல நினைத்ததும் - கடிதப்பதிவு - டைரி

மனசு - நேரில் சொல்ல மறைத்ததும் நினைவில் சொல்ல நினைத்ததும் - கடிதப்பதிவு - டைரி
=========================================================================================

உன் வாழ்க்கையில என்ன என்ன சுகதுக்கம் நேர்ந்தாலும் எனக்கு சொல்லு உன் சந்தோஷத்தின்போது
உன்கூட நிறைய பேரு இருக்கலாம் அவங்க எல்லார்கூட நானும் இருப்பேன் ஆனா உன் கவலையின்போது உன்கூட யார் இருப்பாங்களோ தெரியாது பட் நா இதோ இங்கெங்கேயோதான் இருப்பேன்,, உன் வெற்றியின்போது எல்லோருடன் சேர்ந்து தூரமிருந்து கைத்தட்டிய அதே இடத்தில் ம்ம்ம்,,

உன்மேலுள்ள ஏதோ ஒண்ணு ,,அது ஆசையோ பிரியமோ காதலோ அதையும் தாண்டிய ஏதோ உன்னை அதிகமா அருகவைக்குது ,, இருந்தாலும் தள்ளி நின்னே பார்த்துட்டு போயிடறேன் இதோ பாரேன் அதிகமா பேசக்கூட பயமா இருக்கு ,, எங்க உனக்கு பிடிக்காம போயிடுவேனோன்னு

"இத்தனை காலமா என்னை மட்டுமே பார்த்துகிட்ட எனக்கு உன்னையும் பாக்கனும்னு சொல்லிக் கொடுத்தது உன் பார்வைதான் தெரியுமா,, "

உண்மையை சொன்னால் ,, இப்போல்லாம் பொண்ணுங்க கூட கடலை போடறதையே விட்டுட்டேன் கேர்ள் பிரெண்ட்ஸ் கால் பண்ணாக்கூட மனசு கலகலப்பா இல்ல ம்ம்ம்,,

"ஹிட்லரோட நில ஆக்கிரமிப்பைவிட ,, உன் பார்வையோட "நிலா ஆக்கிரமிப்பு" அதிகமா இருக்கு ம்ம் "

மழைத்தண்ணிக்குள்ள கால விடுறேன் ,, உப்பரிகை வாசக்கதவோரம் சாஞ்சிகிட்டு மீசைக்கடிச்சி சிரிக்கிறேன் ,, ராத்திரி மொட்டை மாடிக்கு வந்து நிலாப்பாக்க விலகச்சொல்லி மேகத்துகிட்ட சண்டை போடுறேன்,, பக்கத்துவீட்டுக் காரன் பாவம் பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு கால் பண்றான் நீ அன்னைக்கு கேட்டப்போ உனக்குக் கொடுக்க நிறைய செல்பி எடுத்தேன் என்ன பண்ண எத்தனை ஸ்கரப்பர் போட்டு கழுவி எடுத்தும் உனக்கனுப்ப யோசிக்கிறேன்,, என்னோட பெட் ல நான் கப்பல் ஓட்டுறேனாம்,,போனவாரம் வந்த ஃப்ரெண்ட் சொல்லிட்டுப்போறான்,, திரும்ப வாடா ன்னா பயப்படுறான்...

பூக்கள் கூடவும் தென்றல் கூடவும் நேத்துவரைக்கும் என் அணைப்புப்பிடிக்காத அடுத்தவீட்டு குழந்தைக்கூடவும் தானே போயி மென்மையா அணுக தோணுது. அதுவும் அவுங்களுக்கொரு பயத்தைக் கொடுத்ததை பார்க்கிறேன்.ஒருமாதிரியாத்தான் பாக்கறாங்க,, யார்க்கூட கடலைப்போட்டப்போவும் இப்படி ஆனதில்ல

"விடாம உறங்கவைக்கிற அப்போதிய என் நல்லப்பழக்கம் இப்போல்லாம் வியாதியா தெரியுற மாதிரி ஒரு ஃபீல்" உறக்கமே வரக்கூடாதுங்குற மாதிரி இருக்கு,, இதனால தூங்கறவன எல்லாம் புடிச்சு எழுப்பி அட்வைஸ் பண்ணிட்டு திரியுறேன்"

உன்கிட்ட சொல்ல அண்ட் செய்ய வேண்டிய எல்லாத்தையும் இதோ என்னை சுத்தி இருக்கிறவங்களோட செஞ்சு ஒத்திகை பாக்கறேன் ,, நீ என்னை நேசிக்காதவரைக்கும் நா உனக்கு யாரோ மாதிரிதானே அதான்,, இவங்க யாராவதுல என்னோட ஏதோ ஒரு கிறுக்குத்தனம் ரசிக்கப்பட்டால் ,, நீயும் அதை ரசிப்பாய் என்றே இதெல்லாம் ம்ம்,, ஹாஹ் ஹாஹ் ஹாஹ்

இன்னைக்கெல்லாம் என்னோட டைரியில் எழுதி அழித்த பக்கங்கள் அதிகமாகுது முதல் முதல் ல உன்னை பிடிச்சிருக்குன்னு சொல்ல கால் பண்ணப்போ ,,,அன்னைக்கு போன்ல உன்கிட்ட இருந்த உன்னோட அமைதியும் நடுக்கமும் பிடிச்சிருந்தது,, என்ன பதில் சொல்லப்போறோம் இவனுக்கு ன்னு தவிச்சதும் ,, இவன் ப்ராடா இருப்பானோ ன்னு உனக்குள்ள நீ தயங்கியதும் எத்தனை பேரு இந்த சந்தேகத்தையும் உணர்வையும் உனக்குள்ள கொடுத்திருக்காங்க ன்னு
எனக்கு தெரியல... பொய் சொல்றேன்னு வேணும்னாலும் நினைச்சிட்டு போ,, இல்ல இவன் பேசுற எல்லா பொண்ணுங்க கிட்டயும் இப்படித்தான் பேசுவானோ ன்னு கூட யோசி,, ,

""இலக்கணம் பூசி மறைக்கிற என் கவிதைகள் போல் இல்லாம ,,, ஆனா ஒருதடவைக்கூட யாருக்கும் எழுத நினைக்காத
என் மனசோட யதார்த்தம் இது,,,""

உன் முறைப்பும் வெறுப்பும் நேசமும் எதுவானாலும் ஏதோ ஒண்ணுக்காவது சொந்தமாகணும் ,, நாலு பேருகிட்ட நீ என்னை பொறிக்கின்னு சொன்னாக்கூட ,,, அட்லீஸ்ட் அதுல ஒரு ஆனந்த கிறக்கம் கிடைக்கலாம் போல எனக்கு ம்ம்ம்ம் :)

"அப்பப்போ இப்படித்தான் உளருவேன் நீ கண்டுக்காதே ம்ம்ம் "

"பூக்காரன் கவிதைகள்"

எழுதியவர் : அனுசரன் (17-Mar-16, 2:55 pm)
பார்வை : 289

மேலே