தெரிந்து கொள்வோம்
PEPSI நன்மைகள் :
பெப்ஸி நன்மையளிக்கும் அதன் பலன்களை காண்போம்
1) டாய்லட் சுத்தம் செய்தல்: டாய்லட் சிங்கில் நாள்பட்ட கறை இருக்கிறதா? கவலைவேண்டாம். கமோடில் ஒரு பாட்டில் PEPSI யை ஊற்றவும். ஒரு மணிநேரம் கழித்து டாய்லட்டை பிளஷ் செய்யவும். கறைகள் மாயமாக மறைந்திருக்கும்
2) துணி துவைத்தல்: துணிகளில் உள்ள கறைகள் போக மறுக்கிறதா? கவலை வேண்டாம். வாஷிங் மெஷினில் டிடர்ஜெண்டை ஊற்றுகையில் உள்ளே சிறிது PEPSI யை ஊற்றவும். அதில் பாஸ்பரிக் அமிலமும், கார்போனிக் அமிலமும் இருப்பதால் துணிகள் பளிச் என சுத்தமாகும்
3) கார்கண்னாடி கழுவுதல்: இதில் சிட்ரிக் அமிலம் இருப்பதால் கண்னாடியை PEPSI விட்டு துடைக்க கண்னாடி பளிச் என சுத்தமாகும்
4) சூயிங் கம் அகற்றுதல்: தலைமுடியில் சூயிங்கம் ஒட்டிகொண்டதா? கவலை வேண்டாம். PEPSI மேலே ஊற்றி சிறிது நேரம் பொறுத்து அகற்ற சூயிங்கம் அகன்றுவிடும்
5) டிஷ் வாஷர்: டிஷ் வாஷிங் டிடர்ஜெண்ட் தீர்ந்துவிட்டதால்? கவலை வேண்டாம் PEPSI ஊற்றி பாத்திரஙக்ளை கழுவ பாத்திரங்கள் பளிச் என சுத்தமாகும்
6) துரு அகற்றுதல்: நாள்பட்ட துருவை அகற்ற மேலே PEPSI ஊற்றி, அல்லது துணியில் PEPSI நனைத்து துடைத்தால் பாத்திரத்தில் உள்ள துரு அகன்று பளிச் என இருக்கும்
7) கார் கண்னாடியில் இருக்கும் பனியை அகற்றூதல்: குளிர்காலத்தில் மேலைநாடுகளில் கார் கண்ணாடியில் பனி படர்ந்து உறைந்துவிடும். அதன் மேல் PEPSI ஊற்றி கொஞ்ச நேரம் காத்திருந்து துடைத்தால் பனி டக் என அகன்றுவிடும்
ஆக இத்தனை நன்மையளிக்கும் PEPSI பெப்ஸியை எல்லாரும் வாங்கி பலனடைவோம்