எந்தப் பல்கலைக் கழகமும் எனக்கு கவுரவ டாக்டர் பட்டம் தரமாடடங்குதே
ஏண்டா தம்பி, நா பல தொழிற் சாலைகளையும் கல்வித் தொழிற் சாலைகளையும் நடத்திட்டு இருக்கறேன். நம்ம நகரத்தலயும் புறநகர்களிலேயும்
மக்கள் என்னக் கல்வித் தந்தை, கல்விச் செம்மல்னனெல்லாம் சொல்லறாங்க. அந்தப் பட்டங்களால எனக்கு என்னடா பிரயோசனம்? எந்தப் பல்கலைக்
கழகமும் என்ன மதிச்சு ஒரு கவுரவ டாக்டர் பட்டம் தரமாட்டங்குதே.
@@@@
அண்ணே நீங்க அதப்பத்தி கவலைப்படாதீங்க. நமக்கு 10 கலை அறிவியல் கல்லூரிகள், 5 பொறியியல் கல்லூரிகள், 2 மருத்துவக் கல்லூரிகள், 2
ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் இருக்குது. இவற்றையெல்லாம் சேத்து ஒரு நிகர் நிலைப் பல்கலைக் கழகமா மாத்திடலாம். நம்ம பல்கலைக் கழகமே
உங்களுக்கு டாக்டர் பட்டம் குடுக்கும். அதுக்கப்பறம் வெறும் மூக்கையாவ இருந்த நீங்க டாக்டர் மூக்கையா ஆயிடுவீங்க. நா பி.ஏவை 5 ஆவது
முயற்சியிலே பாஸ்பண்ணினேன். எம். ஏவை அஞ்சல்வழிக் கல்வி வழியா 3 தடவ தவறி நாலாவது முறை எழுதித் தான் தேர்ச்சி பெற்றேன். நம்ம
பல்கலைக் கழகம் உருவானதுக்கப்பறம் 8 வகுப்பிலேயே எட்டுத் தடவ தவறி இன்னும் நீங்க 8 ஆம் வகுப்பையே தாண்டல. இருந்தாலும் நீங்க நம்ம
நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தின் நிறுவனத் தலைவர் ஆகப் போறீங்க. நா நம்ம பல்கலைக் கழகத்தின் வேந்தர். எனக்கும் கவுரவ டாக்டர் பட்டம்
தருவாங்க. வெறும் நல்லமுத்து -வா இருக்கற நானும் டாக்டர் நல்லமுத்து ஆயிடுவேன்.
@@@
டேய் தம்பி, இதுவரைக்கும் உன்ன வசூல் ராஜான்னுமட்டுந்தா நெனச்சிட்டிருந்தேன். நீ ஒரே கல்லுல ஒரு கொத்து மாம்பழத்தையே காயம்படாம
கையில பிடிக்கற வித்தை தெரிஞ்ச பெரிய ஞானிடா நீ.