காதல் வாசல்

இமை திறந்து வரவேற்குது
விழிவாசல்
இதழ் திறந்து சிரிக்குது
புன்னகை வாசல்
மனம் திறந்து காத்திருக்குது
மௌன வாசல்
கனவோ இது புரியவில்லையே
இது என் காதல் வாசலோ !

இதுவே பஃ றொடை வெண்பாவாக ....
யாப்பார்வலர்கள் இரு பாக்களையும் ஒப்பிடுக . பயிலுக . முயல்க

இமைதிறந் தேவரவேற் கும்விழி வாசல்
இதழ்திறந் தேசிரிக்கும் புன்னகை வாசல்
மனம்திறந்து காத்திருக்கும் உன்மௌன வாசல்
கனவோ புரியவில் லையேயென் அன்பே
இதுதான்கா தல்வாச லோ ?

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (21-Mar-16, 8:57 am)
Tanglish : kaadhal vaasal
பார்வை : 143

மேலே