பெண்ணே

பல பெண்களுக்கு திருமணம் வலியின் உச்சம்.
கருகியகனவுகளே வாழ்வின் மிச்சம்.
வெளியில் சொல்லாத வேதனைகள் கோடி..
கண்ணீரை சிந்திடும் விழி இமையை மூடி..
சமுதாயகூண்டுக்குள் அடைபட்ட பெண்இனம்
கொடுமைக்கு ஆளாகி பலியாகும் வலிதினம்.
கருவிலே இருக்கும் போதே
கல்லரைகட்டுகின்ற சில்லரை மனிதருக்கு
முள்ளறை இதயம்.
சிறகினில் நூல்கட்டி பறக்கவிடப்படும்
கரம் தரும் சுதந்திரம் பலருக்கும் இன்று.
சோகத்தை உதிர்த்து மேகத்தைகிழித்து
தனியாகசாதிக்கும் தணியாத நாள் என்று?

எழுதியவர் : கு.தமயந்தி (21-Mar-16, 11:32 am)
Tanglish : penne
பார்வை : 73

மேலே