கூட்டணி

கூட்டு இல்லாத சாப்பாடா?- கட்சிகளின்
கூட்டு இல்லாத தேர்தலா ?
கூட்டிப் பார்த்து கூட்டிப் பார்த்து
கூட்டணியல் சேருவார்.
கூட்டம் தமக்கு இல்லையெனினும்
குதிரை ஏறி செல்லுவார்.
நாட்டு நலம் ஒன்றேதான் தமது
நாட்ட மென்றும் கூறுவார்.
கொள்கை விட்டு கொடியை விட்டு
வால்பிடித்துச் வெல்லுவார்.
காலத்தின் கட்டாயம் என்று சொல்லி
காலில் விழுந்தும் வணங்குவார்.
பதவி ஆசை இருப்பதாலே
பச்சோந்தியாய் மாறுவார்.
கூட்டணியால் வெற்றி பெற்று
கோட்டை சென்று அமருவார் !

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (21-Mar-16, 8:53 pm)
Tanglish : koottani
பார்வை : 93

மேலே