தேர்தல் மை

கண்களது அழகுபெற பெண்கெல்லாம்
தீட்டுவது மை
எண்ணமதை எழுத்தினிலே எழுதிடவே
வேண்டுவதும் மை
வண்டாடும் சோலையினை வரைந்திடவே
உதவுவதும் மை
வேண்டாதார் முகம்தன்னில் பூசிடவே
தேடுவதும் மை
எந்தச்செய்தி என்றாலும் அச்சடிக்க
உதவுவதும் மை
திருட்டுப்போன பொருள் தேடி வெற்றிலையில்
தடவுவதும் மை
திரும்ப வாக்கு போடாமல் தடுத்திடவே
உதவுவதும் தேர்தல் மையே !
வாக்குப் போட்டேன் என்றுசொல்லி பெருமை
கொள்ளவைப்பதும் மை !
வாக்குப் போட்ட விரல்களுக்கு நன்றியென
வைப்பதுவும் தேர்தல் மை !

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (21-Mar-16, 9:19 pm)
பார்வை : 188

மேலே