காமத் தீ

அந்தக் குப்பியின்
கழுத்து வரை
உனது முத்தங்களை
நிறப்பியிருந்தாய்

அருந்திய
ஒவ்வொரு
மிடறுகளிலும்
என் குரல்வளையை
இறுக்கிய
தாம்புகளைத் திரித்த
உன் நினைவுகளாகவே
இனித்தது

தொண்டைக்குழியில்
எரித்துக் கொண்டே
இறங்கிய
மிடறுகளில்
இரவுகளைத் தரித்த
உனது நிர்வாணம்
உன்னுடனான
எனது
புணர்வுந்துதலைப்
பொசுக்கப் போதுமான
திராவகத்தின்
வீரியத்துடனேயே
இருந்தது

நான் உன்னைத்
தோற்றுவிட்டதாக
எழுதப்படும்
ஒவ்வொரு வரிகளிலும்
உனது
அந்தப் புரத்தில்
என் மீதான காமத் தீ
உனது குறியால்
என்னை
எரியூட்டட்டும் ...

எழுதியவர் : முகிலன் (22-Mar-16, 6:08 am)
சேர்த்தது : முகிலன்
பார்வை : 133

மேலே