அலமேலு நூறாண்டு மேலாக

நூறு வயது வாழ்ந்தாள்
நோய் நொடி இன்றி
நூற்றாண்டு கொண்டாடினாள்
கோலாகலமாக

சுற்றாரைக் கூட்டி மகிழ்ந்தாள்
சுகமான விதத்திலே
தீங்கு என்பதே தெரியாது அவளுக்கு
நன்மையே அவளின் நோக்கம்.

அழகுப் பேச்சு கையாண்டாள்
அழகி என்று கூற முடியாது
வேகம் என்பது அவள் வழி
கோபம் ஆகாது அவளுக்கு.

வாழ்ந்து போனாள் அலமேலு
நூறாண்டு மேலாக
இறந்து போனாள் அலமேலு
கிடக்காமல் வைக்காமல்
அவள் போக்கிலே

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (22-Mar-16, 8:17 pm)
சேர்த்தது : Meena Somasundaram
பார்வை : 302

மேலே