கன்னலிதோ இன்னலிதோ-வெண்பா

பொற்கொடி போன்றவள் பொன்னடி வைத்துவர
அற்பனும் விற்பன்னன் ஆவதென்ன-சிற்பமென
கற்பகப் பூவென கன்னியிவள் தோற்றத்தில்
சொற்பதம் பெற்றனன் யான்

கண்ணொரு மின்னலென மின்னிடும் பொன்மலரோ
மண்மணம் கொஞ்சிடும் மென்மலரோ - வண்ணமதில்
விண்ணிலா ஊர்வலம் கண்டதும் காளையென்
எண்ணமதில் கோர்த்தேன் கவி

தென்றலது சாய்ந்தாடும் திங்களது தேன்சிந்தும்
மின்னலது மார்த்தழுவும் மேகவுலா - பொன்வானில்
என்னவளே இந்நண் பகல்வேளை கண்மணியே
கன்னலிதோ இன்னலிதோ சொல்

வேகத்தில் வந்ததுவோ வேறாகிப் போவதுவோ
தேகத்தை சார்ந்ததுவோ மெய்யூரும் - மோகமிதோ
ஆகச் சிறந்ததடி ஆருயிரில் ஊர்வதடி
ஈகத்தால் வாழ்வதடி நில்

ஈகம்-தியாகம்
வெண்பா

எழுதியவர் : (24-Mar-16, 6:19 am)
சேர்த்தது : வித்யா
பார்வை : 83

மேலே