தெரியாது
குழந்தைப் பருவத்தில்
அப்பா கேட்டார்
குறும்பு செய்கையில்
அத்தை கேட்டார்
பதின்ம வயதில்
பாட்டி கேட்டார்
பல்லை உடைத்த போது
பெரியப்பா கேட்டார்
பள்ளிக்குப் பிந்தியபோது
ஆசிரியர் கேட்டார்
தேர்வில் தேறாத போது
அம்மா கேட்டார்
எங்கோ வெடித்த குண்டுக்கு
இராணுவம் கேட்டது
கோப்பைத் தொலைத்த போது
மேலதிகாரி கேட்டார்.
கடனைக் கட்டாத போது
கந்து வட்டிக்காரன் கேட்டார்.
அவ்வப் போது
பிள்ளைகள் கேட்கின்றனர்
"என்ன செய்தாய்"?
சத்தியமாய் எனக்கு
இன்னமும் தெரியாது