காதல் பிச்சைக்காரன்

கைகள் கோர்த்து
இதழ்கள் தழுவி
இம்சிக்காத இரவுடன்
சண்டைகள் போட்டு
கனவிலும் காதலித்து
கடற்கரை மணல் மீது
அவள் பெயர் எழுதி - அதை
அலை கொண்டு போகாமல்
கைகளால் அணைக்கட்டி
கணுக்கால் புதைய கால்தடம் பதித்து
நீர்த்திவலைகளில் நீட்சிப்பில்
ஆயுள் கூட்டி
கன்னக்குழி அழகில் கால்தடுக்கி விழ
காதலி இல்லாத
நானும் பிச்சைக்காரன்தான்

எழுதியவர் : ஜார்ஜ் (26-Mar-16, 11:33 am)
பார்வை : 152

மேலே