வானில் பறக்கும் நான் - ஹைக்கூ

மாலைத் தென்றல்,
அலைபாயும் உன் கூந்தல்,
எகிறும் என் இதயத் துடிப்பு!

படபடக்கும் உன் இமைகள்,
உள்ளே சுழலும் கரு வண்டுகள்,
எல்லாம் இன்பமயம்!

பால் நிலவு,
உன்னோடு கைகோர்த்து உலா,
வானில் பறக்கும் நான்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Mar-16, 5:43 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 91

மேலே