வண்ணங்கள் அற்ற தேசம்

வண்ணங்கள் அற்ற தேசத்தை
வடிவமைத்துக் கொண்டிருக்கும்
நெசவாளி நெய்கின்ற
தறியொன்றில்
வாழ்ந்து கொண்டிருக்கும்
வறுமையுடன் வெறுமை

நெசவாளியின் தேசம்
புடவை வடிவில் புலப்படும்
அக் கணங்களில்
நியமங்களைச் சேரா
உயரிய வண்ணங்கள்
உருக்குலைந்து
ஒவ்வொன்றாய்
உதிர்ந்து கலைகிறது.

உதிர்ந்த வண்ணங்கள்
ஓடி மறையும் காற்றின் வழி
நெசவாளியின் நினைவில் இருந்து
மெல்ல விலகிச் செல்கிறது
நேர்த்தியான புடவை
வடிவிலான தேசம்.

வண்ணங்களற்ற தேசத்தை
வடிமைத்த நெசவாளி
தேசத்தின் உருவில்
புடவையை நெய்து
தொலைந்த வண்ணங்களை
தேடித் தெளிந்து இப்போது
தேசத்தில் இல்லாத நிறங்களால்
தீட்டிக் கொண்டிருக்கிறான்
அழகான ஓவியம் ஒன்று

எழுதியவர் : சிவநாதன் (28-Mar-16, 2:53 am)
பார்வை : 93

மேலே